‘விஜய் 60’ படப்பிடிப்பு, ரிலீஸ் தேதி விவரங்கள்!

‘விஜய் 60’ படப்பிடிப்பு, ரிலீஸ் தேதி விவரங்கள்!

செய்திகள் 24-Nov-2015 11:47 AM IST Chandru கருத்துக்கள்

‘புலி’யில் பதுங்கிய விஜய், தற்போது அட்லி படத்தின் மூலம் பாய்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தைத் தொடர்ந்து ‘அழகிய தமிழ் மகன்’ பரதன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. துப்பாக்கி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து விஜய்யின் இந்த 60வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் காஜல் அகர்வால். இப்படத்திற்கு இசையமைக்கவிருப்பதன் மூலம் விஜய்யுடன் முதல்முறையாக இணைவிருக்கிறாராம் சந்தோஷ் நாராயணன். பிரவீன் கே.எல். எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்.

தற்போது நடித்துவரும் அட்லி படத்தின் வேலைகள் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ‘விஜய் 60’ படத்தின் துவக்கவிழாவை ஏப்ரலில் வைத்துவிட்டு அந்த மாதமே படப்பிடிப்பையும் துவங்கவிருக்கிறார்களாம். படம் 2017ஆம் ஆண்டு பொங்கலுக்கு உலகமெங்கும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;