பொங்கலுக்கு 2 படங்களை ரிலீஸ் செய்யுமா தேனாண்டாள்?

பொங்கலுக்கு 2 படங்களை ரிலீஸ் செய்யுமா தேனாண்டாள்?

செய்திகள் 24-Nov-2015 11:37 AM IST VRC கருத்துக்கள்

‘பசங்க-2’ படத்தை முடித்த கையோடு விஷால் நடிக்கும் ‘கதகளி’ படத்தின் ஷூட்டிங்கில் பிசியாகி விட்டார் பாண்டிராஜ். விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’யும், பாண்டிராஜின் ‘பாண்டிராஜ் புரொடக்‌ஷன்ஸு’ம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இதனால் படத்தின் வேலைகளை துரித்தப்படுத்தியுள்ளார்கள். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார். இன்னும் படப்பிடிப்பு முடியாத நிலையிலேயே ‘கதகளி’யின் தமிழக விநியோக உரிமையை கைபற்றியுள்ளது ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம். வரிசையாக பல படங்களின் விநியோக உரிமையை வாங்கியுள்ள ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தான் சுந்தர்.சி. இயக்கியுள்ள ‘அரண்மனை-2’ படத்தையும் வெளியிட இருக்கிறது. சுந்தர்.சி.யின் ‘அரண்மனை-2’வும் பொங்கல் வெளியீடு என்று அறிவித்துள்ள நிலையில் ‘கதகளி’, ‘அரண்மனை-2’ ஆகிய இரண்டு படங்களையும் பொங்கல் ரிலீசாக திரைக்கு கொண்டு வருமா ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;