ஜி.வி.பிரகாஷ் + SMS ராஜேஷ் : புதுப்பேட்டை டச்!

ஜி.வி.பிரகாஷ் + SMS ராஜேஷ் : புதுப்பேட்டை டச்!

செய்திகள் 24-Nov-2015 11:24 AM IST Chandru கருத்துக்கள்

தனது ஒவ்வொரு பட டைட்டிலின் ‘ஷார்ட் ஃபார்மை’யும் வித்தியாசமாகக் கொடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ராஜேஷ். தனது முதல் படத்தின் டைட்டிலில் (சிவா மனசுல சக்தி - SMS) துவங்கி கடைசியாக வெளிவந்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) வரை இந்த டிரென்ட்டை பின்பற்றி வரும் ராஜேஷ், தனது அடுத்த படத்திற்கும் வித்தியாசமான பெயர் ஒன்றைப் பிடித்துவிட்டார். ஆம்... செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படத்தின் பிரபல வசனம் ஒன்றை தனது படத்தலைப்பாக வைத்திருக்கிறாராம் இயக்குனர் ராஜேஷ்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ (சுருக்கமாக ‘KIK’) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா இப்படத்தை தயாரிக்கிறாராம். விரைவில் இப்படம் குறித்த கூடுதல் விவரங்களுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - கும் சாரே பாடல் வீடியோ


;