பிணத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா!

பிணத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா!

செய்திகள் 24-Nov-2015 10:41 AM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி. தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன். ‘அவ்னி மூவீஸ்’ நிறுவனம் சார்பாக சுந்தர்.சி தயாரித்திருக்கும் இப்படத்தை ‘நாளைய இயக்குனர் சீசன்-5’ புகழ் எஸ்.பாஸ்கர் இயக்கியிருக்கிறார். வைபவ், ஓவியா, ஐஸ்வர்யா, கருணாகரன்,. சிங்கம் புலி, வி.டி.வி.கணேஷ், யோகி பாபு, சிங்கப்பூர் தீபன் முதலானோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பானு முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சுந்தர்.சி பேசும்போது,

‘‘இதுவும் ஒரு பேய் படம் தான்! ஆனால் இதுவரை வந்த பேய் படங்களை போல இது இருக்காது. இந்த படத்தை இயக்கியிருக்கும் பாஸ்கர் ‘நாளைய இயக்குனர்’ தொடரில் வெற்றி பெற்றவர். அவரது குறும்படங்களை நான் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து நான் அவராது ரசிகர் ஆகி விட்டேன். ஒரு நாள் அவரிடம் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க, நம்ம கம்பெனியில் படம் தயாரிக்கலாம் என்று சொன்னேன். அவர் முதலில் ஒரு கதையைச் சொன்னார். ஆனால் அந்த கதை அவ்வளவு பிடிக்கவில்லை. அவரிடம், ‘நீங்க ஒரு பேய் கதை இருக்கு’ என்று சொன்னீங்களே, அதை சொல்லுங்கள்’ என்றேன். அவர் சொன்ன பேய் கதை எனக்கு பிடித்தது. அந்த கதை தான் இப்போது ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ என்ற பெயரில் உருவாகியிருக்கிறது.

இதில் ஐஸ்வர்யா, ஓவியா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். இருவரும் பேய் ஆக வருவார்கள். சிரிச்சு சிரிச்சு ரசிக்கக் கூடிய ஜாலியான பேய் ஆக இருக்கும். அதே நேரத்தில் ஹாரர் படங்களுக்குரிய அச்சம், பயம், திகில் எல்லாம் இப்படத்தில் இருக்கும்’’ என்றார் சுந்தர்.சி.

இதனை தொடர்ந்து பேசிய படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்யா, ‘‘இப்படத்தில் ‘சிலாக்கி டும்மா…’ என்றொரு குத்துப் பாடல் இருக்கிறது. இந்த பாடலுக்கு சாவு வீட்டுல பிணத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போட்டு நடித்திருக்கிறேன். ஒரு ஹீரோயின் பிணத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போட்ட மாதிரி இதுவரை எந்த படமும் வந்ததில்லை என்று நினைக்கிறேன். அந்த பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது” என்றார் ஐஸ்வர்யா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;