எஸ்.ஏ.சி - விஜய் : ஒரே நேரத்தில் 2 படங்களை தயாரிக்கும் தாணு!

எஸ்.ஏ.சி - விஜய் : ஒரே நேரத்தில் 2 படங்களை தயாரிக்கும் தாணு!

செய்திகள் 23-Nov-2015 4:20 PM IST Chandru கருத்துக்கள்

‘டூரிங் டாக்கீஸ்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. இப்படத்தில் அவருடன் இன்னொரு ஹீரேவாக கவிஞர் பா.விஜய்யும் நடிக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர் 70 வயது நிரம்பிய அதே நேரத்தில் தவறுகளை கண்டு வெகுண்டெழும் கோபக்கார கிழவனாக அதிரடி கதாப்பாத்திரத்திலும், கவிஞர் பா.விஜய் வேகமான துடிப்புள்ள இளம் ரிப்போர்ட்டராகவும், நான் கடவுள் ராஜேந்திரன் நகைச்சுவை கலந்த வில்லனாகவும், எம்.எஸ்.பாஸ்கர் ஒரு கிருமினலான போலீஸ் அதிகாரியாகவும், ஆரோகணம் விஜி புரட்சிகரமான ஏழைத் தாயாகவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் விஜய்விக்ரம் இயக்குகிறார். இவர் பூனா பிலிம் இன்ஸ்டியூட்டிலும், பம்பாயிலும் டைரக்ஷன் படித்தவர். ஜீவன் ஒளிப்பதிவு இயக்குனராகவும், தாஜ்நூர் இசையமைக்க, கலை இயக்குனராக வீரமணியும், ஸ்டன்ட் மாஸ்டராக பில்லா ஜெகனும் பணிபுரிகிறார்கள். கலைபுலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ‘நையப்புடை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த படம் பற்றி தாணு அவர்கள் கூறுகையில்.. ‘‘ஒரு ஆக்ஷன் படத்தை வித்தியாசமாகவும் முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கும் படம்தான் இது. இயக்குனர்கள் பவித்ரன், ஷங்கர், ராஜேஷ் பொன்ராம் இவர்களை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் பட்டறையில் இருந்து புறப்பட்டு வரும் அடுத்த இயக்குனர் விஜய்விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் மகன் இளையதளபதி விஜய், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவரையும் ஹீரோவாக வைத்து படமெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது என்றும் இந்த படத்தின் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பெரிய நடிகராகவும் வளம் வருவார் என்பது நிச்சயம்’’ என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;