தனுஷுக்கு 30 த்ரிஷாவுக்கு 53!

தனுஷுக்கு 30 த்ரிஷாவுக்கு 53!

செய்திகள் 23-Nov-2015 12:43 PM IST Chandru கருத்துக்கள்

13 வருடங்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் தனுஷும், த்ரிஷாவும் இதுவரை ஒருமுறைகூட இணைந்து நடித்ததே இல்லை. 2002ஆம் ஆண்டு வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தனுஷும், ‘மௌனம் பேசியதே’ படம் மூலமும் த்ரிஷாவும் தமிழ் சினிமாவில் நாயகன், நாயகியாக அறிமுகமானார்கள். சாதாரணமாக அறிமுகமான இந்த இருவருமே இப்போது தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.

த்ரிஷாவைப் பொறுத்தவரை ரஜினியைத் தவிர்த்த அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் ஏற்கெனவே இணைந்து நடித்துவிட்டார். தனுஷுடன் மட்டுமே இதுவரை அவர் சேர்ந்து நடித்ததில்லை. ஏற்கெனவே அந்த வாய்ப்பு ‘ஆடுகளம்’ படத்தில் வந்தது. ஆனால், சில பல காரணங்களால் அந்த வாய்ப்பு டாப்ஸிக்குச் சென்றது. இப்போது தனுஷ், த்ரிஷா இணைந்து நடிக்கவிருப்பது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.

தங்கமகன், பிரபுசாலமன் இயக்கும் படங்களைத் தொடர்ந்து எதிர்நீச்சல், காக்கி சட்டை புகழ் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கவிருக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் அவர் தயாரிக்கும் இப்படத்தில் இரட்டை வேடமேற்றிருக்கிறார். அதில் ஒரு தனுஷுக்கு ஏற்கெனவே ஷாம்லி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இன்னொரு தனுஷுக்கு ஜோடியாக, தான் நடிப்பதை தனது ட்வீட் மூலம் உறுதி செய்திருக்கிறார் த்ரிஷா.

13 வருட காத்திருப்பிற்குப் பின், தனுஷுக்கு 30வது படமாகவும், த்ரிஷாவுக்கு 53 படமாகவும் உருவாகவிருக்கும் இப்படத்தின் மூலம் நிகழும் இந்த மேஜிக் கூட்டணியை வெள்ளித்திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;