ராஜபாளையத்தில் விஷாலின் மருது!

ராஜபாளையத்தில் விஷாலின் மருது!

செய்திகள் 23-Nov-2015 12:09 PM IST VRC கருத்துக்கள்

‘கொம்பன்’ பட வெற்றியை தொடர்ந்து முத்தையா இயக்கும் படம் ‘மருது’. விஷால், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கும் இப்படத்தை ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்புச் செழியன் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று ராஜபாளையத்தில் பூஜையுடன் துவங்கியது. இங்கு தொடர்ந்து ‘மருது’வின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. விஷாலும், ஸ்ரீதிவ்யாவும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இப்படத்தில் ராதா ரவியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் இவர்கள் எதிரும் புதிருமாக இருந்து செயல்ப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் அதிரடி ஆக்‌ஷன் படமாம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;