அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 59-ஆவது படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘கலைப்புலி’ எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்யுடன் கதாநாயகிகளாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ஒரு படத்திற்கு தலைப்பை வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்துவது இப்போது ஒரு டிரெண்டாக இருந்து வருகிறது. அந்த வகையில் ‘விஜய்-59’ என்ற பெயரில் உருவாகி வந்த இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்க்கை வருகிற 26-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதனை படத்தின் இயக்குனர் அட்லியே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி ,இசை அமைத்து தயாரித்து வரும் படம் ‘99 சாங்ஸ்’. ஹிந்தி மொழியில்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....