பாபி சிம்ஹாவின் ‘உறுமீன்’ ரிலீஸ் தேதி!

பாபி சிம்ஹாவின் ‘உறுமீன்’ ரிலீஸ் தேதி!

செய்திகள் 23-Nov-2015 10:51 AM IST VRC கருத்துக்கள்

பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் முதலானோர் முக்கிய வேடங்களில் நடித்து, சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ள படம் ‘உறுமீன்’. ‘ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசை அமைத்துள்ளார். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் சென்சார் குழுவினரின் பார்வைக்குச் சென்ற இப்படத்தில் நிறைய சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் அதை நீக்கினால் தான் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் தரமுடியும் என்றும் சென்சார் குழுவினர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த காட்சிகளை நீக்கி விட்டால் படத்தின் கதைக்கு அது பாதகமாக அமையும் என்று படக்குழுவினரின் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அதனை தொடர்ந்து படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனால் இப்படம் மீது கோலிவுட்டில் ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையை வரிசையாக வெற்றிப் படங்களை வாங்கி வெளியிட்டு வரும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது. உறுமீனை அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி 2 ட்ரைலர்


;