மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கம் உதவி!

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கம் உதவி!

செய்திகள் 23-Nov-2015 10:35 AM IST VRC கருத்துக்கள்

‘‘மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தால் எந்த நிவாரணமும்
செய்ய இயலாது, அரசு தான் அதை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தை சேர்ந்த யாரோ பேட்டி அளித்ததாக கூறி ஒரு புரளி பரவி வருவதாக தெரிய வந்துள்ளது. அது முற்றிலும் தவறான தகவல். நடிகர் சங்கத்தை சேர்ந்த யாரும் யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. மழையால் பாத்திக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் இயன்ற உதவிகளை செய்து வருகிறது’’ என்று நடிகர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில்

‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, சிதம்பரம் தாலுக்காவில் அமைந்துள்ள கரிவேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு “The Environmentalist Foundation of India “ என்ற NGO மூலமாக தென்னிந்திய நடிகர் சங்கம் முதற்கட்ட பணியாக சில உதவிகளை மேற்க்கொண்டுள்ளது. அதில் அடிப்படை பொருட்களான அரிசி, பருப்பு ,உப்பு, சர்க்கரை போன்ற சமையல் பொருட்களும், கரண்டி, தட்டு மற்றும் சமையல் பாத்திரங்களும், தூங்குவதற்கு தேவையான பாய், பெட்ஷீட் போன்றவைகளும் மாற்றுத்துணிகளுக்காக புடவை, வேட்டி மற்றும் டி-ஷர்ட் போன்ற பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதற்காக நடிகர் சங்கத்தோடு கைகோர்த்து எஸ்.வி.சேகர், ‘பூச்சி’ முருகன், மனோபாலா, ரோகிணி ஆகியோர் உதவியுள்ளனர். மேலும் நடிகர் அருள்நிதி 1,000 பெட்ஷீட்டுகள் அந்த மக்களுக்காக வழங்கியுள்ளார். இதற்காக கடந்த மூன்று நாட்களாக நடிகர் சங்கத்தைச் சேர்ந்த
குட்டி பத்மினி, கோவை சரளா, லலிதாகுமாரி, சோனியா, மனோபாலா, பசுபதி, உதயா, ஹேமச்சந்திரன், அயூப்கான் மற்றும் சங்க நிர்வாகிகள், அலுவலக மேலாளர் வி.பாலமுருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள் முதலானோர் பாடுபட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் சென்னையில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் அயூப்கான் மற்றும் ஹேமச்சந்திரன் மூலமாக உதவிகள் செய்யப்பட்டுள்ளது’’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டீசர்


;