விக்ரம் படத்தை தயாரிக்கும் ‘புலி’ தயாரிப்பாளர்!

விக்ரம் படத்தை தயாரிக்கும் ‘புலி’ தயாரிப்பாளர்!

செய்திகள் 21-Nov-2015 12:23 PM IST VRC கருத்துக்கள்

‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்படத்தை ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு விக்ரம் நடித்து வந்த ‘10 எண்றதுக்குள்ள’ படப்பிடிப்பு முடிவடைந்ததும் துவங்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் விக்ரம் நடித்து சமீபத்தில் வெளியாகிய ‘10 எண்றதுக்குள்ள’ படம் படு தோல்வியுற, விக்ரமை வைத்து ‘மர்ம மனிதன்’ படத்தை தயாரிக்கும் திட்டத்திலிருந்து ‘ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்போது ’மர்ம மனிதன்’ படத்தை தயாரிக்க, விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன் முன் வந்திருக்கிறார். இது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் இப்போது சூடு பிடித்துள்ளது. இது சம்பந்தமாக நாம் ஷிபு தமீனை தொடர்பு கொண்டு பேசியபோது, ‘‘படம் குறித்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் நல்ல தகவல் வரும்’’ என்றார்.

ஆக, விக்ரம், ஆனந்த் சங்கர், ஷிபு தமீன் இணையும் பட அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;