‘பசங்க-2’ ரிலீஸ் தேதி ரெடி!

‘பசங்க-2’ ரிலீஸ் தேதி ரெடி!

செய்திகள் 20-Nov-2015 1:53 PM IST VRC கருத்துக்கள்

சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘பசங்க-2’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் கவின், நயனா நடிக்க, சூர்யா, அமலா பால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிந்து மாதவி, கார்த்திக் குமார் ஆகியோரும் நடித்துள்ள இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ‘பசங்க-2’ வெளியாகவிருக்கிறது.

’பசங்க-2’வின் ஒளிப்பதிவை பாலசுப்ரமணியம் கவனித்திருக்க, ‘பிசாசு’ படப் புகழ் அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். இப்படம் ரிலீசாகிற டிசம்பர் 4-ஆம் தேதி தான் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினி முருகன்’ திரைப்படமும் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;