விஜய்யின் 60-ஆவது படத்தை இயக்கப் போவது ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் என்று முடிவாகிவிட்ட நிலையில், இப்படத்திற்கு யார் இசை அமைப்பாளர், யார் கதாநாயகி போன்ற பல கேள்விகள் விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. லேட்டஸ்ட் தகவலின் படி விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்த காஜல் அகர்வால் தான் விஜய்யின் 60ஆவது படத்திலும் ஜோடியாக நடிக்கிறாராம். ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களை தொடர்ந்து இப்படத்தில் மூன்றாவது முறையாக விஜய்யுட இணையவிருக்கிறார் காஜல் அகர்வால். விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் தான் விக்ரம் நடித்த ‘தில்’, சிம்பு நடித்த ‘ஒஸ்தி’, அஜித் நடித்த ‘வீரம்’ உட்பட பல படங்களின் வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...