ராகவா லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகேயுள்ள தனலட்சுமி எஞ்சினீயரிங் கல்லுரியில் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தை முதலில் ‘வேந்தர் மூவீஸ்’ தயாரிப்பதாக இருந்தது. தற்போது இப்படம் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு கைமாறியுள்ளது. ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் 87-ஆவது படமாம் இது. இப்படத்தின் துவக்க விழாவில் ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, ‘வேந்தர் மூவீஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.மதன், டி.சிவா, கோவை சரளா, சத்யராஜ், சதீஷ், படத்திற்கு இசை அமைக்கும் அம்ரீஷ், ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன், ஜித்தன் ரமேஷ், படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கும் படம் ‘காஞ்சனா-3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம்...
பெரும்பாலும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள விவேக் ஏற்கெனவே ஒரு சில படங்களில்...
ராகவா லாரன்ஸ் இயக்கி, கதையின் நாயகனாகவும் நடிக்கும் படம் ‘முனி-4 காஞ்சனா-3’. சன் பிக்சர்ஸ் நிறுவனம்...