ராதாமோகன் இயக்கியுள்ள படம் ‘உப்புக் கருவாடு’ கருணாகரன், நந்திதா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. ஏற்கெனவே வித்தியாசமான கதை அமைப்புடன் பல படங்களை இயக்கியுள்ள ராதா மோகன் இப்படத்திலும் வித்தியாசமான ஒரு கதையை கையாண்டுள்ளாராம். இப்படத்தில் நடித்தது குறித்து நந்திதா நம்மிடம் பேசும்போது, ‘பெண்களை மையப்படுத்திய கதை உப்புக் கருவாடு என்றும், இதில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன்’’ என்றும் கூறினார். First Copy Pictures மற்றும் Night Show cinema ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வருகிற 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படத்தின் விநியோக உரிமையை ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் கல்யாணி பிரியதர்சன், இயக்குனர்கள்...
செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம்...
யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம் ‘டாணா’. ‘நோபல் மூவீஸ்’ என்ற...