நிஜ கதையில் சஞ்சிதா ஷெட்டி!

நிஜ கதையில் சஞ்சிதா ஷெட்டி!

செய்திகள் 20-Nov-2015 10:22 AM IST VRC கருத்துக்கள்

‘சூது கவ்வும்’, ‘பீட்சா 2’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் அடுத்து நடிக்கும் படம் ‘லவ் குரு’. இது ரொமான்டிக் த்ரில்லர் ரக படமாம்! சமீபத்தில் வெளியான ‘முருகாற்று படை’ படத்தில் ஹீரோவாக நடித்த சரவணன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாகியுள்ளார் சஞ்சிதா ஷெட்டி. அறிமுக இயக்குனர் புதுராஜா இயக்கும் இப்படம் ஒரு நிஜ சம்பத்தை தழுவி எடுக்கப்படும் படமாம்! சரவணன் சஞ்சிதா ஷெட்டி ஆகியோருடன் இப்படத்தில் பசுபதி, கலாபவன் மணி, எம்.எஸ்.பாஸ்கர் முதலானோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னோடு விளையாடு - டிரைலர்


;