விஜய் 60 புதிய தகவல்கள்!

விஜய் 60 புதிய தகவல்கள்!

செய்திகள் 19-Nov-2015 5:28 PM IST VRC கருத்துக்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 59-ஆவது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வர, இன்னொரு பக்கம் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்? அப்படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கிறது? போன்ற தகவல்களும் வெளியாகி ரசிகர்களை குழுப்பிக் கொண்டிருந்தது. இந்நிலையில் விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை எடிட்டர் பிரவீன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்யும் பணியை பிரவீனிடம் வழங்கியிருக்கிறார்கள். விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியவர் பரதன் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யும், பரதனும் மீண்டும் இணையும் இந்த படத்தை அஜித் நடிப்பில் ‘வீரம்’ படத்தை தயரித்த ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யார் இசை அமைக்க போகிறார், கதாநாயகி யார் போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;