தயாரிப்பாளராகிறார் சிவாஜி பேரன்!

தயாரிப்பாளராகிறார் சிவாஜி பேரன்!

செய்திகள் 19-Nov-2015 4:45 PM IST VRC கருத்துக்கள்

‘சக்சஸ்’, ‘மச்சி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் துஷ்யந்த். நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், ராம்குமார் சிவாஜியின் புதல்வருமான் துஷ்யந்த் திரைப்பட தயாரிப்பாளராகிறார். இவர் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்று பெயர் வைக்கப்படுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்குகிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க, துஷ்யந்தின் சித்தப்பா பிரபுவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஜெயராம் மகன் காளிதாஸ் தற்போது நடித்து வரும் படம் ‘ஒரு பக்க கதை’. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொட்க்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் காளிதால் நடிக்கும் இரண்டாவது படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’. கிராமத்து பின்னணியில் சொல்லப்படும் கதையாம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவகாமியின் செல்வன் - டிரைலர்


;