டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனாவை மணக்கிறார் ‘கயல்’ சந்திரன்

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனாவை மணக்கிறார் ‘கயல்’ சந்திரன்

செய்திகள் 19-Nov-2015 3:59 PM IST VRC கருத்துக்கள்

பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சந்திரன். இவர் சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருக்கும் அஞ்சனாவை திருமணம் செய்யவிருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கவிருக்கிறது. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இம்மாதம் 29-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. சந்திரன் தற்போது ‘கிரகணம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் இல்லற வாழ்க்கையில் இணையப் போகும் சந்திரன், அஞ்சனாவுக்கு ‘டாப்10சினிமா’வின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா டீஸர்


;