ஜி.வி.யை மீண்டும் இயக்கும் ‘டார்லிங்’ இயக்குனர்!

ஜி.வி.யை மீண்டும் இயக்கும் ‘டார்லிங்’ இயக்குனர்!

செய்திகள் 19-Nov-2015 12:21 PM IST VRC கருத்துக்கள்

‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘புரூஸ்லீ’. இந்த படம் தவிர ‘கெட்ட பையன் கார்த்தி’ என்ற படத்திலும் நடிக்கவிருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் அடுத்து ‘கத்தி படத்தை தயாரித்த ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்த செய்தியை சமீபத்தில் நமது இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். ஆனால் ‘லைக்கா’ தயாரிப்பில் ஜி.வி.நடிக்கும் படத்தை இயக்குவது யார் என்பது அப்போது முடிவாகாமல் இருந்தது. இப்போது அந்த படத்தை இயக்குவது ஜி.வி. நடிப்பில் ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டனே இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது ஜி.வி.பிரகாஷ், சாம் ஆன்டன் மீண்டும் இணையும் இப்படம் ‘டார்லிங்’ படத்தைப் போன்று ஹாரர், த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறதாம்! இந்த படத்திற்கான கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - டீசர் 3


;