இலங்கைப் பெண்ணை மணந்தார் ஆரி!

இலங்கைப் பெண்ணை மணந்தார் ஆரி!

செய்திகள் 19-Nov-2015 10:37 AM IST VRC கருத்துக்கள்

‘நெடுஞ்சாலை’, ‘தரணி’, ‘மாயா’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஆரி. இவருக்கும் லண்டனில் பணி புரியும் இலங்கை தமிழ் பெண்ணான நதியாவுக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. ஆரியும், நதியாவும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரண்டு குடும்பத்திலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து இருவரும் நேற்று முன் தினம் (17-11-15) சென்னை பாரிசீலுள்ள காளிகாம்பாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு அன்று மாலை சென்னையிலுள்ள தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஆரி, நதியா தம்பதியர் நீடூழி வாழ ‘டாப்10சினிமா’வின் நல் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;