‘தங்க மகன்’ பாடல்கள் எப்போது?

‘தங்க மகன்’ பாடல்கள் எப்போது?

செய்திகள் 19-Nov-2015 10:33 AM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படக்குழுவினர் மீண்டும் இணைந்துள்ள படம் தனுஷின் ‘தங்க மகன்’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தங்க மகனின் இறுதிகட்ட வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வர, படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷுடன் சமந்தா, எமி ஜாக்சன் என் இரண்டு கதாநாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘வேலையில்லா பட்டதாரி’ பட வெற்றிக்கு பிறகு அப்படக் குழுவினர் மீண்டும் இப்படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாதம் 27-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பெரும்பாலான பாடல்களும் மெலடி ரக பாடல்களாக அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;