10 நிமிடத்துக்கு ஒரு முறை பயமுறுத்தும் படம்!

10 நிமிடத்துக்கு ஒரு முறை பயமுறுத்தும் படம்!

செய்திகள் 18-Nov-2015 2:26 PM IST VRC கருத்துக்கள்

சிம்ரன், நிகிஷா பட்டேல், இனியா, கன்னட பட புகழ் வசிஷ்டா என 4 கதாநாயகிகள் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘கரையோரம்’. கன்னடத்தில் இரண்டு படங்களை இயக்கிய அனுபவத்துடன் தமிழிலும் இப்படத்தின் மூலம் இயக்குனராக கால் பதிக்கவிருக்கிறார் ஜே.எஸ்.கே. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் வெளியாகவிருக்கிறது. ஹாரர் பட வரிசையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக கணேஷ் பிரசாத் நடித்திருக்க, மும்பையை சேர்ந்த இசை அமைப்பாளர் சுஜித் ஷெட்டி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் ஜே.எஸ்.கே., பேசும்போது,

‘‘பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உங்களை பயமுறுத்தும் விதமாக இப்படத்தை படு த்ரில்லிங்காக உருவாக்கியிருக்கிறோம். குறிப்பாக பெண்களை மையப்படுத்திய கதை இது என்பதால் இதில் சிம்ரன், நிகிஷா பட்டேல், இனியா, வசிஷ்டா என நான்கு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். இதில் சிம்ரன் ஐ.பி.எஸ்.போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சிம்ரன் இப்படத்தின் கதையை கேட்டதும், ‘இது எனது ரீ-என்ட்ரிக்கு சரியான படம்’ என்று கூறி உடனே நடிக்க ஒப்புக்கொண்டர். கடற்கரையோரம் நடக்கும் கதை என்பதால் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பும் பீச் பகுதிகளிலேயே நடைபெற்றுள்ளது’’ என்றார்.
அர்.ஜே.கம்பன்ஸ் என்ற நிறுவனம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுக்க ‘ஸ்டுடியோ 9’ சுரேஷ் வெளியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் டீஸர்


;