மலேசியா டூ அமெரிக்கா – ‘கபாலி’ பிளான்!

மலேசியா டூ அமெரிக்கா – ‘கபாலி’ பிளான்!

செய்திகள் 18-Nov-2015 12:25 PM IST VRC கருத்துக்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதனை தொடர்ந்து மலேசியாவுக்கு பயணமான ‘கபாலி’ படக்குழுவினர் கடந்த சில நாட்களாக மலேசியாவில் கபாலியின் காட்சிகளை விறுவிறுப்பாக ஷூட் செய்து வருகிறார்கள். மலேசியாவில் இதுவரை எத்தனையோ இந்திய திரைப் படங்களின் படப்பிடிப்புகள் நடந்திருக்கிறது என்றாலும், ரஜினியின் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பிற்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள வரவேற்பு, பரபரப்பு இதுவரை வேறு எந்த மொழி படத்தின் படப்பிடிப்புக்கும் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. ரஜினிக்கென்று தனி பாதுகாப்பு வளையம் அமைத்து தான் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள் என்றாலும், ரஜினி செல்லும் வழியெல்லாம் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கூடி விட, பெரும் சிரமத்துக்கு இடையே தான் ‘கபாலி’யின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார்களாம் ‘கபாலி’ படக்குழுவினர்.

லேட்டஸ்டாக நமக்கு கிடைத்த தகவலின்படி மலேசியா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினி வருகிற 23-ஆம் சென்னை திரும்புகிறாராம். இதனை தொடர்ந்து ரஜினி ஒரு சில நாட்கள் ஓய்வெடுத்தப் பிறகு ‘கபாலி’யின் படப்பிடிப்புக்காக அமெரிக்க பயணமாகவிருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;