8 நாளில் 100 கோடி : வசூல் வேட்டையில் வேதாளம்!

8 நாளில் 100 கோடி : வசூல் வேட்டையில் வேதாளம்!

செய்திகள் 18-Nov-2015 11:40 AM IST Chandru கருத்துக்கள்

முதல் நாள் வசூலில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா சாதனைகளையும் முறியடித்துவிட்டதாகக் கூறப்படும் ‘வேதாளம்’ படத்தின் வசூல் வேட்டை, இடைவிடாத மழை நாட்களிலும் தொடர்ந்திருப்பதாகத் தெரிகிறது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே 15 கோடிகளை வாரிச்சுருட்டிய இப்படம், தற்போது 8 நாட்களில் 64 கோடிகளை வசூலித்திருக்கிறதாம். தமிழ் சினிமா வரலாற்றைப் பொறுத்தவரை இது ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது. அதோடு, உலகளவிலான வசூலில் 8 நாட்களில் நூறு கோடியை எட்டியிருக்கிறதாம் வேதாளம். ரஜினி, ஷங்கர் கூட்டணியில் உருவான ‘எந்திரன்’ படமே 100 கோடியை எட்டுவதற்கு இதைவிட அதிக நாட்களை எடுத்துக் கொண்டதாம்.

உலகளவில் அஜித்தின் ‘வேதாளம்’ திரைப்படம் 8 நாட்களில் தோராயமாக வசூலித்துள்ள விவரம் கீழே...

தமிழ்நாடு - 64 கோடி
கேரளா - 5.12 கோடி
கர்நாடகா - 6.73 கோடி
இந்தியாவின் இதர பகுதிகளில் - 2.10 கோடி
வெளிநாடுகளில் - 27 கோடி

மொத்தம் - 104.95 கோடி

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 - வை வை வை வைஃபை சாங் டீசர்


;