ஹாரர் படத்தில் பரத்!

ஹாரர் படத்தில் பரத்!

செய்திகள் 18-Nov-2015 11:13 AM IST VRC கருத்துக்கள்

‘மைனா’ படத்தை தயாரித்த ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘சவுகார்பேட்டை. இப்படம் இம்மாதம் 27-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. ஹாரர் பட வரிசையில் உருவாகியிருக்கும் இப்படத்தை வடிவுடையான் இயக்கியிருக்கிறார். கோலிவுட்டில் இப்படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தை தொடர்ந்து ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தினர் மீண்டும் ஒரு ஹாரர் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இதனை ‘சவுகார்பேட்டை’ படத்தை இயக்கிய வடிவுடையானே இயக்கவிருக்கிறார். ‘பொட்டு’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்களாம்! கதாநாயகிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. ‘சவுகார்பேட்டை’ படம் வெளியானதும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;