வெற்றிகளின் தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வெற்றிகளின் தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 18-Nov-2015 10:35 AM IST VRC கருத்துக்கள்

சமீபகாலத்தில் தொடர் வெற்றிகளை கொடுத்த நடிகை யார் என்றால் அவர் நயன்தார தான்! சமீபத்தில் வெளியான ‘தனி ஒருவன்’, ‘மாயா’, ‘நானும் ரௌடிதான்’ என ஹாட்ரிக் வெற்றியை தந்த நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ மலையாள படமும் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது ஜீவாவுடன் ‘திருநாள்’, கார்த்தியுடன் ‘காஷ்மோரா’, சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ மமுட்டியுடன் ‘புதிய நியமம்’ (மலையாளம்) என நான்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழி சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக திகழ்ந்து வரும் நயன்தாராவுக்கு இன்று விசேஷமான நாள்! அதாவது நயன்தாரா பிறந்த நாள் இன்று! சினிமாவில் தனக்கான ஒரு பாணியை வகுத்துக் கொண்டு தொடர் வெற்றிகளை குவித்து வரும் தேவதை நயன்தாரா மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும். இந்த சந்தோஷ தருணத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;