கௌதம் மேனன் + ஜெயம் ரவி : மீண்டும் துருவ நட்சத்திரம்?

கௌதம் மேனன் + ஜெயம் ரவி : மீண்டும் துருவ நட்சத்திரம்?

செய்திகள் 17-Nov-2015 4:22 PM IST Chandru கருத்துக்கள்

சில பல காரணங்களால் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் கைவிடப்பட்டது. அப்படத்திலிருந்து சூர்யா வெளியேறிய பிறகு, அவ்வப்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இவர் நடிக்கப் போகிறார்... அவர் நடிக்கப்போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இப்போது இந்தப் பட்டியலில் நடிகர் ஜெயம் ரவியும் இணைந்திருக்கிறார். ஆம்... மீண்டும் தனது ‘துருவ நட்சத்திரம்’ புரொஜெக்ட்டை கையிலெடுத்திருக்கிறாராம் கௌதம் மேனன். சமீபத்தில் ‘தனி ஒருவன்’ படத்தைப் பார்த்த அவர், ‘துருவ நட்சத்திரம்’ கேரக்டருக்கு ஜெயம் ரவி பொருத்தமாக இருப்பார் என கௌதம் முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். இதுகுறித்து ஜெயம் ரவியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளாதாகக் கூறுகிறார்கள். இந்த கூட்டணி உறுதியாகும் பட்சத்தில், இப்படத்தை ஃபோட்டோன் கதாஸ் நிறுவனமே தயாரிக்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;