பாலாவின் மெகா கூட்டணி!

பாலாவின் மெகா கூட்டணி!

செய்திகள் 17-Nov-2015 11:58 AM IST VRC கருத்துக்கள்

'சேது', 'பிதாமகன்', 'நான் கடவுள்' உட்பட பல முக்கியமான படங்களை இயக்கியவர் பாலா. இவர் இயக்கும் படங்கள் என்றாலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.
விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நாயகர்கள் அனைவருமே இவருடைய பட்டறையில் இருந்து தான் பெரிய நாயகர்களாக வளர்ந்திருக்கிறார்கள்.
தற்போது சசிகுமார் நாயகனாக நடித்து பாலா இயக்கியிருக்கும் 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது இளையராஜா இசையமைத்திருக்கும் 1000வது படம். விரைவில் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

‘தாரை தப்பட்டை’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாகி இருக்கிறார் இயக்குநர் பாலா. நடிகர்கள் ஆர்யா, விஷால், அரவிந்த் சாமி, அதர்வா, ராணா ஆகியோரை இணைத்து தமிழ் திரையுலகின் மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் பாலா. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க பாலா திட்டமிட்டுள்ளார்! இப்படத்தில் முன்னணி நாயகர்கள் பலரும் இணைந்து நடிக்கவிருப்பதால், தற்போதே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;