நடிகர் சங்க கட்டிடம் – முதலமைச்சர் உறுதி!

நடிகர் சங்க கட்டிடம் – முதலமைச்சர் உறுதி!

செய்திகள் 17-Nov-2015 10:26 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, உபதலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேற்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அவர்களை முதலமைச்சர் ஜெயலலிதா அன்போடு வரவேற்று, நடிகர் சங்கத்தின் நிலைமையை அக்கறையோடு கேட்டறிந்துகொண்டு புதிய நிர்வாகத்தை மனதாரா வாழ்த்தினார். நடிகர் சங்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை இந்த புது நிர்வாகம் மீண்டும் கொண்டு வரவேண்டும். இந்த புது நிர்வாகம் அதை செய்யுமென்று நம்பிக்கை இருக்கிறது. சங்கத்தின் வளர்ச்சிக்காக அரசின் முழு ஆதரவு இருக்கும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

சங்கத்தின் புது கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று முதலமைச்சரிடம் சங்க பொதுச் செயலாளர் விஷால் வேண்டுகோள் வைக்க, முதலமைச்சர் ஜெயலலிதா புன் சிரிப்போடு அந்நாளை முன்கூட்டியே தெரிவிக்குமாறும் கண்டிப்பாக கலந்து கொள்வதாகவும் உறுதி கூறினார். இந்த செய்தியை நடிகர் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;