‘ஈட்டி’க்கு போட்டியாக சவுகார்பேட்டை!

‘ஈட்டி’க்கு போட்டியாக சவுகார்பேட்டை!

செய்திகள் 16-Nov-2015 12:42 PM IST VRC கருத்துக்கள்

ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, சரவணன், சுமன், வடிவுக்கரசி முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து, வடிவுடையான் இயக்கியுள்ள படம் ‘சவுகார்பேட்டை’. ‘ஷாலோம் ஸ்டியோஸ் நிறுவனம்’ சார்பில் ஜான் மேக்ஸ், ஜான் இருவரும் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை தொடர்ச்சியாக வெற்றிப் படங்க்ளை வெளியிட்டு வரும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் 50 பேய்கள் கோர தாண்டவம் ஆடியிருப்பதாக கூறப்படுகிறது. இது வரை வெளிவந்த பேய் படங்களுக்கெல்லாம் தாய், இந்த ‘சவுகார்பேட்டை’ என்றும் கூறப்பட்டு வரும் இப்படத்தை வருகிற 27-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். இதே தினம் தான் அதர்வா, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்து, ரவி அரசு இயக்கியுள்ள ‘ஈட்டி’யும் ரிலீசாகிறது. இதனால் அதர்வாவின் ‘ஈட்டி’யுடன் ஸ்ரீகாந்தின் ‘சவுகார்பேட்டை’ மோதும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;