டென்னிஸிலும் களமிறங்கும் பிரபுதேவா!

டென்னிஸிலும் களமிறங்கும் பிரபுதேவா!

செய்திகள் 16-Nov-2015 12:14 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் நடன இயக்குனராக, நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக இருந்து வரும் பிரபுதேவா விளையாட்டு துறையிலும் கால் பதிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டைப் போல, சாம்பியன் டென்னிஸ் லீக் (CTL) போட்டிகள் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை பிரபல டென்னிஸ் விளையாட்டு வீர்ரான விஜய் அமிர்தராஜ் நடத்துகிறார். இந்த ஆண்டு இரண்டாவது சாம்பியன் டென்னிஸ் லீக் போட்டிகள் வருகிற 23-ஆம் தேதி துவங்கி டிசம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் சர்வதேச விளையாட்டு வீர்ர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்தப் போட்டியில் மொத்தம் 6 அணிகள் விளையாட இருக்கிறது இந்த ஆண்டு முதல் ‘வி சென்னை வாரியர்ஸ்’ என்ற அணியும் இதில் விளையாடுகிறது. இந்த அணியை பிரபுதேவாவும், வேல்ஸ் பல்கலைக்கழக இணை வேந்தர் ஐசரி கணேஷும் இணைந்து வாங்கியுள்ளனர். இந்த அணியின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது பிரபுதேவா பேசும்போது,

‘‘நடன கலைஞராக, நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக நான் இருந்தபோது என்னை ஆதரித்த மக்களும், மீடியாவும் இப்போது நான் விளையாட்டு துறையில் ஈடுபடுவதையும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். நான் டென்னிஸ் விளையாடியது இல்லை என்றாலும், அந்த விளையாட்டு எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் ‘வி சென்னை வாரியர்ஸ்’ அணியின் பிராண்ட் அம்பாசிடராக இருக்க விரும்பினேன். ஆனால் நண்பர் ஐசரி கணேஷ் என்னை இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் ஆக்கி விட்டார். நடைபெறவிருக்கும் அனைத்து போட்டிகளிலும் என் பங்களிப்பும் இருக்கும்’’ என்றார்.
இந்த போட்டிக்காக உருவாக்கப்பட்டுல்ள விளம்பர படத்திற்கு மதன் கார்க்கி பாடலை எழுத, தேவிஸ்ரீபிரசாத் இசை அமைக்க, பிரபுதேவா நடனம் ஆடியுள்ளார். இந்த விளம்பர படம் விரைவில் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி 2 டீஸர்


;