6 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘உத்தமவில்லன்’

6 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘உத்தமவில்லன்’

செய்திகள் 16-Nov-2015 11:51 AM IST VRC கருத்துக்கள்

‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் சார்பில் லிங்குசாமி தயாரித்து, ரமேஷ் அரவிந்த் இயக்கிய படம் ‘உத்தமவில்லன்’. சமீபத்தில் வெளியான இப்படத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், பார்வதி, நாசர், ஊர்வசி முதலானோர் நடித்திருந்தனர். இப்படம் அண்மையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் (கமல்ஹாசன்), சிறந்த பின்னணி இசை (ஜிப்ரான்), சிறந்த பாடல் (ஜிப்ரான்), சிறந்த சவுண்ட் டிசைன் (குணால் ராஜன்) என 5 விருதுகள் கிடைத்துள்ளது. இது தவிர சமீபத்தில் நடந்த ரஷ்யன் சர்வதேச திரைப்பட விழாவிலும் ‘உத்தம வில்லன் திரையிடப்பட்டது. இந்த விழாவில் சிறந்த இசை அமைப்பாளராக ஜிப்ரான் தேர்வு செய்யப்பட்டார். ஆக மொத்தம் கமல்ஹாசனின் ‘உத்தம வில்லனு’க்கு 6 விருதுகள் கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சண்டக்கோழி 2 ட்ரைலர்


;