‘கத்தி’ தயாரிப்பாளருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்குமார்!

‘கத்தி’ தயாரிப்பாளருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்குமார்!

செய்திகள் 14-Nov-2015 3:21 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்த ‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். ‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘புரூஸ்லீ’. இந்த படம் தவிர ‘பென்சில்’ என்ற படத்திலும் நடிக்கும் ஜி.வி., ‘கெட்ட பையன் கார்த்தி’ என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

‘லைக்கா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தற்போது திரைப்பட விநியோகத்திலும் இறங்கியுள்ளது. சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படத்தை இந்நிறுவனம் தான் வெளியிட்டது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்க மகன்’ படத்தையும் இந்நிறுவனமே வெளியிடவிருக்கிறது. இந்த படங்கள் தவிர ஷங்கர் இயக்கவிருக்கும் ‘எந்திரன்-2’ படத்தை தயாரிப்பதும் ‘லைக்கா’ தான் என்று கூறப்பட்டு வருகிறது. லைக்கா - ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;