இந்த மாத இறுதியில் பாய்கிறது ஈட்டி!

இந்த மாத இறுதியில் பாய்கிறது ஈட்டி!

செய்திகள் 14-Nov-2015 11:48 AM IST VRC கருத்துக்கள்

‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் படம் ‘ஈட்டி’. தடகளப் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ரவி அரசு இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. அதனை தொடர்ந்து அனைத்து வேலைகளும் முடிவடைந்த ‘ஈட்டி’யை இம்மாத்ம் 27ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சண்டிவீரன்’ திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் இந்த மாத இறுதியில் பாயவிருக்கும் ‘ஈட்டி’ மீது அவர் பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;