25-ஆவது நாளில் ‘நானும் ரௌடிதான்’

25-ஆவது நாளில் ‘நானும் ரௌடிதான்’

செய்திகள் 14-Nov-2015 11:25 AM IST VRC கருத்துக்கள்

‘போடா போடி’ படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கிய படம் ‘நானும் ரௌடிதான்’. சமீபத்தில் வெளியான இப்படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். அனிருத் இசை அமைத்துள்ளார். தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் சொல்லும்படியான வெற்றியை தராத நிலையில் ‘நானும் ரௌடிதான்’ அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வரும் நயன்தாரா, அனிருத், ஆகியோரை தவிர்த்து இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்திருப்பதால் இப்படக் குழுவினர் அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ‘நானும் ரௌடிதான்’ வெளியாகி இன்று 25-ஆவது நாளை தொட்டுள்ள நிலையில் இன்னும் பல தியேட்டர்களில் ‘ரௌடி’யின் ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;