‘ஜெயம்’ ரவியின் ‘மிருதன்’ ரிலீஸ் ப்ளான்!

‘ஜெயம்’ ரவியின் ‘மிருதன்’ ரிலீஸ் ப்ளான்!

செய்திகள் 13-Nov-2015 3:30 PM IST VRC கருத்துக்கள்

‘தனி ஒருவன்’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடித்து வரும் படம் ‘மிருதன்’. தமிழ் சினிமாவின் முதல் ஜாம்பி (zombie) ரக படமாம் இது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் இப்படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்துள்ளார் லட்சுமி மேன்ன். ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் துவங்கி, தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினரே அறிவித்துள்ளார்கள். ஹிட் அடித்த ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி நடித்து வெளிவரும் படம், ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றிப் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் படம் என்பதோடு சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வேதாளம்’ படத்தை தொடர்ந்து லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவரும் படம் என பல சிறப்புக்களோடு இப்படம் வெளிவரவிருக்கிறது. மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள மற்றொரு படமான ‘ஈட்டி’யும் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தில் அதர்வா ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்க, அறிமுக இயக்குனர் ரவி அரசு இயக்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;