கலையரசனும், சூரியும் இணையும் படம்!

கலையரசனும், சூரியும் இணையும் படம்!

செய்திகள் 13-Nov-2015 12:15 PM IST VRC கருத்துக்கள்

ஏற்கெனவே பல வெற்றிப் படங்களை தயாரித்த ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா அடுத்து தயாரிக்கும் படம் ‘ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்’. தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்து வரும் டி.சிவா சினிமாவுக்கு வந்து 25-ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி தனது வெள்ளிவிழா ஆண்டு படமாக இதனை தயாரிக்கிறார் டி.சிவா. பல இயக்குனர்களுடன் பணியாற்றிய ‘ஓடம்’ இளவரசு இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஜெமினிகணேசனாக கலையரசனும், சுருளிராஜனாக சூரியும் நடிக்கிறார். காதலுக்கு பெயர் பெற்றவர் ஜெமினி கணேசன், காமெடியில் பெயர் பெற்றவர் சுருளி ராஜன். காதலுக்கும் காமெடிக்கும் முக்கியத்தும் கொடுத்து உருவாக்கப்படும் இப்படத்தில் நான்கு கதாநாயகிகள் இடம் பெறுகிறார்கள். இவர்களுடன் இளவரசு, மயில்சாமி இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கி கோடை விடுமுறை காலத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

தற்போது ‘திருநாள்’, ‘போக்கிரி ராஜா’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஜீவா அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘ஜெமினி கணேசன்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் ஜெமினிகணேசன் என்ற பெயரில் இரண்டு படங்கள் தயாராகி வருவது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும், ஆச்சர்த்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;