‘டூப் ரஜினி’க்கு மேக்-அப் டெஸ்ட் : ‘எந்திரன் 2’ அப்டேட்

‘டூப் ரஜினி’க்கு மேக்-அப் டெஸ்ட் : ‘எந்திரன் 2’ அப்டேட்

செய்திகள் 13-Nov-2015 12:11 PM IST Chandru கருத்துக்கள்

100 கோடி வசூல் என்ற பிம்பத்தை ‘சிவாஜி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியதே ஷங்கர் - ரஜினி கூட்டணிதான். அதன்பிறகு ‘எந்திரன்’ மூலம் உலகளவில் 200 கோடியை வசூல் செய்து, இந்திய சினிமாவையே வாய்பிளக்க வைத்தார்கள். இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைவார்கள் என ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக் கொண்டிருந்தவேளையில், ‘எந்திரன் 2’ படம் பற்றிய செய்திகள் ஒருசில மாதங்களாக சமூக வலைதளங்களில் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கின்றன.

‘லிங்கா’விற்குப் பிறகு தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியாவில் முகாமிட்டிருக்கிறது ரஜினி அன்ட் கோ. அது ஒரு புறமிருக்க, தன் ‘எந்திரன் 2’ படத்திற்காக பிரத்யேக மேக்-அப் டெஸ்ட் ஒன்றை தனது உதவி இயக்குனர்களுடன் இணைந்து நடத்திக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து மேக்-அப் மேன் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருக்கிறாராம். ரஜினியைப் போலவே தோற்றம் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க நபர்களை தேடிப்பிடித்து மேக்-அப் டெஸ்ட் நடத்தி வருகிறார்களாம். இதில் தேர்வாகும் நபரை ரஜினி சம்பந்தப்பட்ட சில காட்சிகளுக்கு ‘டூப்’பாக பயன்படுத்துவதற்குதான் இந்த ஏற்பாடாம். ‘கபாலி’ முடிந்ததும் ‘எந்திரன் 2’ படப்பிடிப்பில் கலந்துகொள்வாராம் சூப்பர்ஸ்டார். இப்படத்தை ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;