விக்னேஷ் சிவன் + ஏ.எம்.ரத்னம் : சிவகார்த்திகேயனின் புதுக்கூட்டணி!

விக்னேஷ் சிவன் + ஏ.எம்.ரத்னம் : சிவகார்த்திகேயனின் புதுக்கூட்டணி!

செய்திகள் 13-Nov-2015 11:28 AM IST Chandru கருத்துக்கள்

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி ரிலீஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது ஆர்.டி.ராஜாவின் ‘24AM ஸ்டுடியோ’ தயாரிக்கும் பிரம்மாண்ட படமொன்றில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிவா. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்த அறிமுகப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஒளிப்பதிவுக்கு பி.சிஸ்ரீராம், இசைக்கு அனிருத், ஒலிப்பதிவுக்கு ஆஸ்கர் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி என ‘டாப் மோஸ்ட்’ டெக்னீஷியன்கள் இப்படத்தில் கைகோர்த்திருக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் அடுத்த படத்தை ‘நானும் ரௌடிதான்’ புகழ் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி ஏற்கெனவே வெளியாகியிருந்தது. இப்படத்தை தயாரிக்கப்போவது அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னமாம். இவரின் தயாரிப்பில் அஜித் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த ‘வேதாளம்’ படம் பண மழையை கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்குவதுபோல் தனது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை நாயகனாக்கியிருக்கிறார் ஏ.எம்.ரத்னம் என்கிறார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;