24-ல் ‘24’ - சூர்யா அறிவிப்பு!

24-ல் ‘24’ - சூர்யா அறிவிப்பு!

செய்திகள் 12-Nov-2015 5:15 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘24’ படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது. சூர்யாவின் ‘2டி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தில் சூர்யா வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. சூர்யா, விக்ரம் குமார், சமந்தா, ஏ.ஆர்.ரஹ்மான் என பெரும் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற 24-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனை சூர்யாவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சூர்யாவின் ‘2டி’ நிறுவனம் தயாரித்துள்ள மற்றொரு படமான ‘பசங்க-2’ இம்மாதம் 27-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா, அமலா பால், பிந்துமாதவி முதலானோர் நடித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;