ரஜினி பட தலைப்பில் விஜய்சேதுபதியா?

ரஜினி பட தலைப்பில் விஜய்சேதுபதியா?

செய்திகள் 12-Nov-2015 11:59 AM IST VRC கருத்துக்கள்

‘தென்மேற்கு பருவகாற்று’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி. ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தர்மதுரை’ என்று டைட்டில் வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் 1991-ல் வெளியான படம் ‘தர்மதுரை’. இப்போது ரஜினி நடித்த படங்களின் தலைப்பை மீண்டும் புதிய படங்களுக்கு சூட்டிவரும் நிலையில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்திற்கும் ரஜினி பட தலைப்பை வைக்க முடிவு செயதிருக்கிறார்கள்! சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படம் இன்னும் ரிலீசாகவில்லை. இப்படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஆர்.கே.சுரேஷ் விஜய்சேதுபதி நடிப்பில் ‘வசந்தகுமாரன் என்ற படத்தை தயாரிக்க இருந்தார்! ஆனால் விஜய்சேதுபதிக்கும், ஆர்.கே.சுரேஷுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அப்படம் கைவிடப்பட்டது. இப்போது ‘தர்மதுரை’ படம் மூலம் இருவரும் மீண்டும் இணையவிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;