ஏன் கௌதம் மேனன் மலையாள படத்தில் நடிக்கிறார்?

ஏன் கௌதம் மேனன் மலையாள படத்தில் நடிக்கிறார்?

செய்திகள் 12-Nov-2015 10:35 AM IST VRC கருத்துக்கள்

வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கும் ஒரு மலையாள படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம், நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ஜேக்கபின்டெ சொர்க்க ராஜ்ஜியம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொண்ட்தற்கான காரணம் குறித்து கௌதம் மேனன் கூறும்போதும், ‘‘எனக்கு வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய அத்தனை படங்களும் பிடிக்கும். அதனால் அவர் ‘என் படத்தில் உங்களுக்காக ஒரு கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் நடிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டபோது என்னால் அதை தவிர்க்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் ஒரு மலையாள பட யூனிட்டினருடன் ஒர்க் பண்ண வேண்டும் என்பதும் என் நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அதனால் அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்’’ என்று கூறியுள்ளார். இதை தவிர சமீபத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் திரைக்கதை எழுதி மாபெரும் வெற்றிபெற்ற ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் கூட கௌதம் மேனன் குறித்த ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;