கன்னடத்திலும் வெற்றிபெற்ற பிசாசு!

கன்னடத்திலும் வெற்றிபெற்ற பிசாசு!

செய்திகள் 12-Nov-2015 10:08 AM IST VRC கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘பிசாசு’ கன்னடத்தில் ‘ராக்‌ஷஸி’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகி கடந்த வாரம் வெளியானது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அஷ்ரஃப் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுகம் நவரசன் நாயகனாகவும், சிந்து லோகநாத் நாயகியாகவும் நடித்துள்ளார். தமிழில் ராதாரவி நடித்த கேரக்டரில் கன்னடத்தில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி நடித்துள்ளார். ஏற்கெனவே ஜி.கே.ரெட்டி ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார் என்றாலும், அவர் ஒரு முழுநீள கேரக்டரில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் விஷால், ஜி.கே.ரெட்டி, இயக்குனர் அஷ்ரஃப் மற்றும் ‘ராக்‌ஷஸி’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ‘பிசாசு’ படத்திற்கு இசை அமைத்த அரோல் கொரேலி தான் கன்னட ‘ராக்‌ஷஸி’க்கும் இசை அமைத்துள்ளார். சென்னையிலுள்ள ஃபோர் ஃபிரேம்ஸ் பிரிவ்யூ தியேட்டரில் தமிழ் சினிமா பிரபலங்களுக்காக இப்படத்தின் பிரத்தியேக காட்சி திரையிடப்பட்டது. அதில் விஷால், ஜி.கே.ரெட்டி, இயக்குனர் அஷ்ரஃப் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் டீலக்ஸ் ட்ரைலர்


;