‘ப்ரண்ட்ஸ்’ புகழ் சித்திக் இயக்கத்தில் அஜித்?

‘ப்ரண்ட்ஸ்’ புகழ் சித்திக் இயக்கத்தில் அஜித்?

செய்திகள் 11-Nov-2015 12:02 PM IST VRC கருத்துக்கள்

அஜித்தின் ‘வேதாளம்’ ரிலீசாகி ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஓடிக்கொண்டிருக்க, அடுத்து அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறர் என்ற கேள்வி தான் இப்போது கோலிவுட்டை சுற்றி வருகிறது. இந்நிலையில் அஜித் அடுத்து மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் நடிக்கிறார் என்றும் இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே இயக்க இருக்கிறார் என்றும், மலையாளத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவே தமிழிலும் அஜித்து ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் நாம் விசாரித்ததில் இது முற்றிலும் தவறான தகவல் என்பது நிரூபணமாகியுள்ளது! இது சம்பந்தமாக மலையாள இயக்குனர் சித்திக்கை தொடர்புகொண்டு பேசியபோது,

‘‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் ஓடிக்கொண்டிருக்கும்போது இது மாதிரி நிறைய தகவல் வெளியானது. அப்போது நிறைய பேர் என்னிடம் அது பற்றி கேட்டார்கள். இப்போது அஜித்தின் ‘வேதாளம்’ படம் வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் அது மாதிரி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை தமிழிலும், ஹிந்தியிலும் ரீ-மேக் செய்து இயக்கும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அஜித் தரப்பிலிருந்து இதுவரை யாரும் அது சம்பந்தமாக என்னை தொடர்பு கொண்டது கிடையாது. இது வரை வெளியான தகவல்களில் கொஞ்சமும் உண்மை இல்லை. நான் இப்போது என்னுடைய அடுத்த மலையாள பட வேலைகளில் பிசியாக இருக்கிறேன். அது முடிந்த பிறகு தான் அடுத்த படம் குறித்து யோசிப்பேன்’’ என்றார் இயக்குனர் சித்திக்.

ஏற்கெனவே மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘கிரீடம்’ படத்தின் தமிழ் ரீ-மேக்கில் அஜித் நடித்திருக்கிறார் என்றாலும், இப்போது அஜித்துக்கு ரீ-மேக் படங்களில் நடிக்க அதிக விருப்பம் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;