ஆர்.கே.யின் பைரவா!

ஆர்.கே.யின் பைரவா!

செய்திகள் 9-Nov-2015 6:58 PM IST VRC கருத்துக்கள்

தற்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் ஆர்.கே., இந்த படத்தை தொடர்ந்து ‘பைரவா’ என்ற படத்தில் நடிக்கிறார். ‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என மலையாள இயக்குனரான ஷாஜி கைலாசுடன் மட்டுமே ஆர்.கே. பணியாற்றுகிறார் என்ற பெயர் தமிழ் திரையுலகில் இருந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘பைரவா’ திரைப்படத்தை தமிழ் சினிமாவில் உள்ள ஒரு முன்னணி இயக்குனர் இயக்க இருக்கிறார். குழந்தைகளை வெகுவாக கவரும் வகையிலான கதையசம் கொண்ட படமாக இது இருக்கும் என்கிறார் ஆர்.கே. இப்படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வைகை எக்ஸ்பிரஸ் - டிரைலர்


;