34 கோடிகளை வாரிச் சுருட்டிய ‘நானும் ரௌடிதான்’

34 கோடிகளை வாரிச் சுருட்டிய ‘நானும் ரௌடிதான்’

செய்திகள் 7-Nov-2015 10:59 AM IST Chandru கருத்துக்கள்

விஜய்சேதுபதியின் கேரியரில் இது ஒரு சூப்பர் வெற்றி. இதற்கு முன்பு அவரின் ஒரு சில படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றிருந்தாலும், ‘நானும் ரௌடிதான்’ படம்தான் அவரின் லிஸ்ட்டிலேயே பெஸ்ட் வசூல் செய்த படமாக அமைந்திருக்கிறது. அதிலும் 2 வாரத்திலேயே இந்த சாதனையைச் செய்திருக்கிறது இப்படம். தனுஷ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில், விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் ‘நானும் ரௌடிதான்’ படம் உலகளவில் 2 வாரத்தில் 34 கோடிகளை வசூலித்திருப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வசூல் விவரங்கள் இதோ...

தமிழ்நாடு - 26 கோடி
கர்நாடகா - 0.75 கோடி
கேரளா - 0.50 கோடி
மற்ற மாநிலங்கள் - 0.25 கோடி
மொத்தமாக இந்தியாவில் - 27.50 கோடி

இந்தியாவில் 27.50 கோடியை வசூல் செய்துள்ள இப்படம், வெளிநாடுகளில் மட்டுமே 6.5 கோடிகளை வசூலித்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக 2 வாரங்களில் 34 கோடிகளை வசூலித்திருக்கிறதாம் ‘நானும் ரௌடிதான்’ படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;