கமல் + வெங்கட்பிரபு + அனுஷ்கா : கொண்டாட்ட கூட்டணி

கமல் + வெங்கட்பிரபு + அனுஷ்கா : கொண்டாட்ட கூட்டணி

செய்திகள் 7-Nov-2015 10:35 AM IST Chandru கருத்துக்கள்

இப்படி ஒரு கூட்டணியில், ஒரு படம் அமைந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்ப்பதே அலாதியான சுகம்தான். ஆனால், இந்த கூட்டணி அமைந்திருப்பது படத்திற்காக அல்ல. தங்களின் பிறந்தநாளை ஒரே நாளில் கொண்டாடிக் கொண்டிருக்கும் கூட்டணி இது. ஆம், கமல், அனுஷ்காவைப்போல இயக்குனர் வெங்கட்பிரபுவும் நவம்பர் 7ஆம் தேதி பிறந்தவர்தான். ‘சென்னை 28’ மூலம் விளையாட்டாக ஹிட் அடித்த வெங்கட்பிரபு ‘மங்காத்தா’ மூலமாக மகத்தான வெற்றியைப் பெற்றார். தொடர்ந்து கார்த்தி, சூர்யா என அடுத்தடுத்து தனது கேரியரில் முக்கிய நடிகர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

தனது அடுத்த படத்தில் மீண்டும் தனது ‘சென்னை 28’ கூட்டணியுடன் வெங்கட்பிரபு களமிறங்கப்போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்று சொல்வார்கள், ஆனால் பிரேம்ஜியின் விஷயத்தில் ‘அண்ணனுடையான் படத்திற்கு அஞ்சான்’ என பழமொழியை மாற்றிச் சொல்லும் அளவுக்கு வெங்கட்டின் ஒவ்வொரு படத்திலும் இடம்பிடித்துவிடுவார் பிரேம்ஜி.

பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட் ஜி!

கமல், அனுஷ்கா, வெங்கட்பிரபுவுடன் இன்று பாடகி உஷா உதூப், பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் இன்று தங்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;