‘தேவசேனா’வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

‘தேவசேனா’வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

செய்திகள் 7-Nov-2015 10:19 AM IST Chandru கருத்துக்கள்

தற்போதைய தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் இரண்டு நாயகிகள் என்றால், அது நயன்தாராவும், அனுஷ்காவும்தான். தமிழ், மலையாளத்தில் நயன்தாரா கலக்கிக் கொண்டிருக்க, தமிழ், தெலுங்கில் அதிரடி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா. அதிலும் ‘பாகுபலி’ படத்தின் முதல்பாகம் வெளிவந்து 100 நாட்களைக் கடந்து இன்னமும் ஓடிக்கொண்டிருப்பது அனுஷ்காவுக்கு மிகப்பெரிய அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. முதல்பாகத்தில் தேவசேனாவாக அவர் ஒருசில காட்சிகள் மட்டுமே வந்துபோனாலும், ரசிகர்களின் மனதில் ஷிவடுவின் அன்னையாக நீங்காத இடம் பிடித்துவிட்டார். ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான்?’ என்ற கேள்வியின் பதிலுக்காக மட்டுமின்றி, தேவசேனாவின் காதல், ஆக்ஷன் அத்தியாயங்களைப் பார்ப்பதற்காகவும்தான் ‘பாகுபலி’ 2ஆம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகர்களில் கமல், விக்ரம், சூர்யா ஆகியோர் எப்படி தங்களின் கேரக்டருக்காக மெனக்கெடுவார்களோ, நடிகைகளில் அனுஷ்காவும் அப்படித்தான். விரைவில் வெளிவரவிருக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக எந்த நடிகையும் செய்யத்துணியாத காரியத்தை அவர் செய்திருப்பதுதான் இந்திய சினிமாவின் தற்போதைய ஹாட் டாபிக். குண்டு அனுஷ்காவாக இருந்தாலும், 100 கேஜி தாஜ்மஹாலாக அவரை எண்ணி ரசிகர்கள் கொண்டாடுவதுதான் அனுஷ்காவின் வெற்றி ரகசியமே.

இன்று (நவம்பர் 7) நடிகை அனுஷ்காவின் பிறந்தநாள். தேவசேனாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;