6 மொழிகளில் டிரென்ட் : உலகநாயகன் ரசிகர்கள் அதகளம்!

6 மொழிகளில் டிரென்ட் : உலகநாயகன் ரசிகர்கள் அதகளம்!

செய்திகள் 7-Nov-2015 9:52 AM IST Chandru கருத்துக்கள்

கமல் மட்டுமல்ல, அவரைப்போலவே அவரின் ரசிகர்களும் ரொம்பவே வித்தியாசமானவர்கள்தான். மற்ற நடிகர்களின் ரசிகர்களைப்போல கட்அவுட் வைப்பது, பேனர் அடிப்பது, பாலாபிஷேகம் செய்வது, முதல்நாள் முதல் காட்சியின்போது டிரம்ஸ் அடித்து ஊரையே அதிர வைப்பது, வெடி வெடிப்பது என இதை மட்டுமே செய்து கொண்டிருக்க மாட்டார்கள். இதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். தங்கள் நாயகனின் வழிகாட்டுதலின்படி ரத்ததானம், அன்னதானம், நலப்பணிகள், கிளீன் இந்தியா திட்டம் என மக்களுக்குப் பயனுள்ள வகையிலேயே அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கும். தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், இன்று (நவம்பர் 7) ‘தூங்காவனம்’ நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள்.

மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களைப்போலவே தங்கள் நாயகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்தை இந்திய அளவில் ட்விட்டரில் டிரென்ட் செய்து வருகிறார்கள் கமல் ரசிகர்கள். ஆனால், அதில் ஒரு வித்தியாசம். பெரும்பாலும் அனைவரும் ஆங்கில வார்த்தையை மட்டுமே பயன்படுத்தி டிரென்ட் செய்வார்கள். ஆனால் கமல் ரசிகர்கள் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என 6 மொழிகளில் ( #HBDKAMALகமல்कमलകമലಕಮಲ್కమల్ ) கமல் பெயரை பயன்படுத்தி டிரென்ட் செய்து வருகிறார்கள். இந்திய அளவில் இந்த டிரென்ட் பெரிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

இந்திய சினிமாவின் என்சைக்ளோபீடியாவான உலகநாயகனுக்கு ‘டாப் 10 சினிமா’ சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடாரம் கொண்டான் - ட்ரைலர்


;